நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாளின் பெயர் அவரது உறவினர் வீட்டு அழைப்பிதழில் சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த மணப்பாடு பகுதியை சேர்ந்த வினோஜின் என்பவரின் வீட்டில் திருவிருந்து விழா நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழில் அவரது உறவினரான நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பிற அரசியல் கட்சி பிரமுகர்களின் பெயர்கள் கட்சி பொறுப்புடன் சேர்த்தே அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் போது இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.