கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்நிலையில், முதலமைச்சரை வரவேற்பதற்காக பழையபட்டினம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சரக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில் மீண்டும் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, கச்சிராயநத்தம் என்ற கிராமத்திற்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது.அதில் பயணித்த 15க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், குப்புசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.