விண்வெளித் துறையில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் இந்தியா விரைவான முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
‘மன் கி பாத்’-இன் 119வது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விண்வெளித்துறையில் சதம் அடித்திருப்பதாகவும், இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100வது செயற்கைகோளே அதற்கு சாட்சி என்றும் கூறினார்.
மேலும், ஒரே ஏவுகலன் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வரலாற்று சாதனையை இஸ்ரோ படைத்ததாகவும் புகழாரம் சூட்டினார். இளைஞர்களுக்கு விருப்பமான துறையாக விண்வெளித்துறை மாறியுள்ளதாக கூறிய அவர், விண்வளித்துறையில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
விண்வெளி அறிவியல் போலவே செயற்கை நுண்ணறிவு துறையிலும் இந்திய தனது பலத்தை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக, மகளிர் தினத்தன்று (மார்ச் 8) எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக ஊடகக் கணக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊக்கமளிக்கும் பெண்கள் குழுவிடம் ஒப்படைப்பதாக பிரதமர் மோடி கூறினார்,
அந்த நாளில் அவர்கள் தங்கள் வேலை மற்றும் அனுபவங்களை தங்கள் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய இந்தப் பெண்கள், தங்கள் சாதனைகள், அனுபவங்கள் மற்றும் சவால்களை தேசத்துடன் பகிர்ந்து கொள்ள தளங்களைப் பயன்படுத்துவார்கள் என்றும் கூறினார்.
பிரதமரின் இந்த நிகழ்ச்சியை உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய எஸ்சி மோர்ச்சா தலைவர் LalSinghArya
மற்றும் கட்சி காரியகர்த்தாக்களுடன் கேட்டார். பிரதமர் மோடியின் ஞானம் நம்மை விசித் பாரதத்தை நோக்கி தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும் எல்.முருகன் கூறியுள்ளர்.