அசாமில் தேயிலை தோட்டம் தொடங்கி 200 ஆண்டுகளானதையொட்டி, கவுஹாத்தியில் நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டம் தொடங்கப்பட்டது. இதன் 200-ஆவது ஆண்டு விழா கவுஹாத்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தனக்கும் தேயிலைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டார். பின்னர், பிரதமர் மோடி, மேளம் அடித்து கலை நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
பின்னர் 8 ஆயிரத்து 600 கலைஞர்களும் மேள வாத்தியத்துடன் புல்லாங்குழல் இசைத்து உற்சாகமாக நடனமாடினர். இதை பிரதமர் மோடி கண்டுகளித்தார்.
பின்னர், பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பிரம்மாண்ட லேசர் ஷோ நடைபெற்றது. இந்த லேசர் காட்சியை பொதுமக்கள் கரவொலி எழுப்பி கண்டு ரசித்தனர்.