நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைக்கு மாறாக செயல்படுவதாகவும், முன்னுக்கு பின் முரணான கருத்துகளை கூறி வருவதாகவும் தெரிவித்து முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட நாதக செயலாளர் பாவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது கட்சியில் இருந்து விலகும் அவர், 2019-ஆம் ஆண்டு அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் 29 ஆயிரத்து 347 வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.