அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Aug 5, 2025, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Feb 25, 2025, 07:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருப்பத்தூர் அரசுப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவிகள், அந்தப் பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி இன்று வெளிவந்துள்ளது. தமிழகம் முழுவதுமே கடந்த சில ஆண்டுகளாக, பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதை ஆகியிருக்கிறது. ஆனால், பெண் குழந்தைகளுக்கு எதிராகப் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

ஒவ்வொரு முறையும், நமது குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளான பின்னர், குற்றவாளிகளைக் கைது செய்து விட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் திமுக அரசு, இந்தக் குற்றங்களைத் தடுப்பதற்கும், பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த அமைப்புக்களையே கலைத்திருக்கிறது என்பதுதான் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் ஆலோசனை மையம் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. இதனை அடுத்து, அப்போதைய அதிமுக அரசு, மூன்று மாவட்டங்களுக்கு ஒரு நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தை அமைத்திருந்தது என தெரிவித்துள்ளார்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் திட்டத்தையே நிறுத்திவிட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட அரசு வாகனங்கள், முடக்கப்பட்டு, மூலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், சுமார் ரூ. 40,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறையில், அரசுப் பள்ளிகளில் மட்டுமே இது போன்ற பாலியல் குற்றங்களும், மாணவ, மாணவியர் எதிர்கொள்ளும் இதர பிரச்சினைகளும் அதிகளவில் நடைபெறுகின்றன என்பதிலேயே, திமுக அரசும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவ, மாணவியரைக் கையாளும் விதம் குறித்துத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் தரமான கல்வி வாய்ப்பையும் மறுத்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும் அமைப்பையும் பலவீனப்படுத்தி, ஒட்டுமொத்தமாக, அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டையே முடக்குவதுதான் திமுகவின் நோக்கமாக இருக்கிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து அரசுப் பள்ளிகளில், மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், முதலமைச்சரைப் போலவே விளம்பர மோகத்தில் திரிந்து கொண்டிருக்கிறார். அமைச்சராக நீடிக்க இவருக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது போல, உளவியல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களின் பிரச்சினைகள், தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டு, தீர்வு வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும்படி, பள்ளிகளில் தகுதி பெற்ற உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றாமல், அப்பா, அண்ணன் என்று நாடகமாடிக் கொண்டு, தனியார் பள்ளிகள் வளர்ச்சிக்கு நேரடியாக உதவிக் கொண்டிருக்கும் பகுதி நேரப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தனது பதவியின் பொறுப்பை இனியாவது உணர்வாரா? என  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: tn bjptn govtDMK is destroying the structure of government schools: Annamalai alleges!DMKMK Stalin
ShareTweetSendShare
Previous Post

தொழில்நுட்ப உதவியுடன் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது : சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி

Next Post

கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மு.க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies