மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெப்ப அலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் மும்பை, தானே மற்றும் கொங்கன் மண்டலத்தில் கடும் வெப்ப அலை வீசக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மும்பையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என கூறப்படுகிறது.