அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில், கடந்த டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
ஆனால் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரனின் தாயார் கங்காதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சென்னை மாநகர காவல் ஆணையர் எந்த விதிகளையும் பின்பற்றாமல், ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளார்.
சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவிப்பதுடன், அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.