கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 34-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், புதிய ‘தர்மசாஸ்தா அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப யுகத்தில், உலக நாடுகளுக்கு இணையான சர்வதேச தரத்திலான கல்வியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை போன்ற, மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் ஆகச்சிறந்த முன்னெடுப்புகள் குறித்து விளக்கமளித்தாகவும். பாரதப் பிரதமர் மோடி, பொதுத் தேர்வு எழுதுகின்ற மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கின்ற வகையில் ஆண்டுதோறும் நடத்துகின்ற #parikshapecharcha போன்ற கலந்துரையாடல் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்தாக அவர் கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியின் செயலாளர் திரு.சந்தோஷ் நாயர் , கோயம்புத்தூர் ஐயப்ப சேவா சங்கத் தலைவர் திரு.KK. இராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..