கிருஷ்ணகிரி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த கூசனப்பள்ளியை சேர்ந்த ராஜூ என்பவர் வீட்டில் செம்மரக் கட்டைகளை பதுக்கி வைத்துள்ளதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் சோதனையிட்டதில் 715 கிலோ எடை கொண்ட செம்மரக் கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தலைமறைவாகியுள்ள வீட்டின் உரிமையாளர் ராஜூவை போலீசார் தேடி வருகின்றனர்.