நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் புகாரில் நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2011-ல் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் 12 வார காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சீமானை விசாரணைக்கு ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் போலீசார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் வழக்கு குறித்து புதிய தகவல்கள் சேகரிக்கபட்டதாக கூறப்படுகிறது.