சென்னை அண்ணாநகரில் முன் விரோதம் காரணமாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ரவுடி சின்ன ராபர்ட்.
ஏ கேட்டகிரி ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் அன்னை சத்யா நகர் முதல் தெரு வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன ராபர்ட் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரவுடி சின்ன ராபர்ட் கூட்டாளியான கோகுல் என்பவரை அயனாவரம் பகுதியை சேர்ந்த லோகு என்பவர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்ததும் இதனால் லோகுவுக்கும் சின்ன ராபர்டுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும் தெரிய வந்தது.
இதன் காரணமாக லோகு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சின்ன ராபர்ட்டை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.