தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கையை அரசியல் பிரச்சாரமாக மாற்ற முயல்வதாக மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், இன்னொரு மொழிப்போருக்கு தயாராக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை தடுப்பதற்கு சமம் என தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக கூறியுள்ள ஜெயந்த் சௌத்ரி, இதை வைத்து நீண்ட கால அரசியல் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
முற்போக்கு அரசியல் செய்வதாக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், மொழி விஷயத்தில் பிற்போக்கு சிந்தனையுடன் செயல்படுவதாக ஜெயந்த் சௌத்ரி கூறியுள்ளார்.
வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு நடத்திவரும் வெளிநாட்டு மனிதவளக் கழகம் மூலம் பல மொழிகள் பயிற்றுவிக்கப்படும் நிலையில், இந்தி மொழிக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு எனவும் மத்திய இணை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.