தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், 12 வாரங்களுக்குள் உரிய விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீமான் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.