மகா கும்பமேளாவுக்கு வந்த பெண் ஒருவர், தனது கணவரை வீடியோ காலில் அழைத்து செல்போனை நீரில் மூழ்க வைத்து புனித நீராடல் நடத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா விழா சிறப்புற நடைபெற்று வந்தது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், இந்த மகா கும்பமேளாவில் பெண் ஒருவர் தனது கணவருடன் வீடியோ காலில் பேசியவாறு அந்த போனை நீரில் மூழ்கச் செய்து டிஜிட்டல் ஸ்நானம் செய்துள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.