வன விலங்குகளால் மலைவாழ் மக்கள் மரண பயத்தில் வாழ்வது உரிமை மீறல் என்று கேரள உயர்நீதிம்ன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் காட்டு யானைகள், சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து பொது மக்களை தாக்கும் சம்பவம் சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகிறது.
அதிலும் பலர் உயிரிழந்ததால் மலை கிராம மக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக கோன்னியில் உள்ள கூட்டு மக்கள் குழு தாக்கல் செய்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வன விலங்குகளால் மலைவாழ் மக்கள் மரண பயத்தில் வாழும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தேவை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.