பணபலம், படை பலம் கொண்ட திமுக அரசு நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள பயத்தில் உதவியாளர்களை கைது செய்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி பாத்திமா ஃபர்கானா தெரிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையினர் மற்றும் மப்டி உடையில் இருந்த சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்ததை தடுக்கவே சீமானின் காவலாளி முற்பட்டுள்ளார் என்றும், முன்னாள் ராணுவ வீரர் எப்படி இன்னொரு காவல்துறை அதிகாரியிடம் அத்துமீறி நடந்திருப்பார் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஒரு வீட்டில் பாதுகாவலராக இருப்பவர் யார் எதற்காக வருகிறார் என்பதை கேட்பது அடிப்படை உரிமை என்றும், காவல் ஆய்வாளர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
பணபலம், படைபலத்தை வைத்துக்கொண்டு நாதகவை பார்த்து திமுக பயப்படுவதற்கான காரணம் என்ன என்றும் அவர் கூறினார்.
சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் வீட்டில் சம்மனை ஒட்டியது தவறு என்றும், காவலாளியின் சமூகத்தை காவல் அதிகாரி எதற்காக கூறினார் என்றும் கூறினார்.