எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்மனை வீட்டின் கதவில் ஒட்டியதன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினார்.
தான் ஓசூரில் இருப்பதை தெரிந்து கொண்டே, வீட்டில் சம்மன் ஒட்டியுள்ளதாகவும், சம்மனை கிழிப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா என்றும் அவர் வினவினார்.
நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளருக்கு என் வீட்டில் என்ன வேலை என்றும், எத்தனை வழக்குகள் போட்டாலும் பயப்படமாட்டேன் என்றும் கூறினார். இன்று மாலை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராவேன் என்றும் சீமான் கூறினார். கைது செய்யப்பட்ட இருவரை காவல் துறையினர் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக அரசால் தன்மை சமாளிக்க முடியவில்லை எனறும் அதனால் அவர்கள் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.
34 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிட தயாரா என கேள்வி எழுப்பிய அவர், கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? என்பதை களத்தில் தனித்து நின்று பார்ப்போம் என்றும் சவால் விடுத்தார்.