திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில் இருந்த ஐஸ் கிரசர் இயந்திரத்தில் ஆயிரத்து 395 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.