விருத்தாச்சலத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணை பலமாக தாக்கிவிட்டு சுமார் 4 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மேட்டுத்தெருவை சேர்ந்த தாரணி என்பவர் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து மோதிய மர்மநபர், அவரின் தலைமுடியை பிடித்து தாக்கியுள்ளார். இதனால் தாரணி மயக்கமடையவே, அவர் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பினார்.