சேலத்தில் பண மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் விழாவில் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் நெப்போலியன் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் ஐந்து ரோடு அருகே செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம், முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மக்களிடம் இருந்து பணத்தை வசூலித்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த நிறுவனம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடமிருந்து 100 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக 15 பேரை பிடித்து விசாரணை நடத்திய நிலையில, 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கோடி ரூபாய் ரொக்கம், தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் நெப்போலியன் மோசடி நிறுவன விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், விசாரணை நேர்மையான முறையில் நடக்குமா? எனக் கேள்வி எழுந்துள்ளது.