தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஏப்ரல் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுளளது.
சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரத்தில், அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேலும், சிலை கடத்தல் பிரிவில் இருந்த காவல்துறை அதிகாரிகள் பணி மாற்றம் பெற்று சென்றதால் கோப்புகள் மாயமான விவகாரத்தில் இதுவரை யாரையும் அடையாளம் காண முடியவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிலை கடத்தல் கோப்புகள் மாயமான விவகாரத்தில் பதியப்பட்ட 11 வழக்குகளையும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,
விசாரணை அறிக்கையை ஏப்ரல் முதல் வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.