பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் காட்ட தயார் என டெல்லி பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து, இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு தகவல் ஆணையத்திற்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து கெஜ்ரிவால் கேட்ட விவரங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு ஆஜரான டெல்லி பல்கலைக் கழகம், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் காட்டத் தயாராக உள்ளோம் எனவும், ஆனால் மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.