பழைய கேள்விகளையே போலீசார் கேட்டதாகவும், தேவைப்பட்டால் அடுத்த விசாரணைக்கு ஒத்துழைப்பேன் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பேன் என்றும், விசாரணையில் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளையே போலீசார் கேட்டதாகவும் அவர் கூறினார்.
3 மாத காலம் அவகாசம் இருந்த நிலையில் 3 நாட்களில் விசாரணையை முடிக்க நினைத்தது ஏன்? எனறும் காவல் துறையினருக்கு அரசு தரப்பில் இருந்து அழுத்தம் இருப்பதாகவும் சாடினார்.
அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவு ஏற்படுத்த நினைத்தவர்களுக்கு தான் பின்னடைவு என்றும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த பிரச்னை மீண்டும் வந்ததாகவும், வீட்டில் ஒட்டப்பட்டிருந்த சம்மனை கிழித்தால் கைது செய்வீர்களா என்றும் சீமான் கூறினார்.
கருணாநிதி பலமுறை சிறையில் அடைத்து தம்மை தலைவராக்கினார் என்றும், அப்பாவும், மகனும் சிறையில் அடைத்து முதல்வராக்கிவிட்டு தான் செல்வார்கள் என்றும் சீமான் தெரிவித்தார்.
“பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது நான் வந்தால் செய்தியில் யாரை போடுவது என்ற சூழல் ஏற்படும் என்றும். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசும் வரை இருந்துவிட்டு பிறகு என்னை காவல்நிலையத்திற்கு போலீசார் வர சொன்னதாகவும் அவர் கூறினார்.
ஸ்டாலின் ‘அப்பா’வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் சீமான் தெரிவித்தார்.