சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகரன் ஆகியோருக்கு சோழிங்கநல்லூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், சீமானை காவல் நிலையத்தில் ஆஜராகும்படி, அவரது வீட்டு வாசலில் சம்மன் ஒட்டப்பட்டது.
சீமான் வீட்டின் பணியாளர் சுபாகரன் போலீஸ் ஒட்டிய சம்மனை கிழித்தெறிந்துள்ளார். இதனை அறிந்த நீலாங்கரை ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ், சுபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தடுக்க வந்த சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.
இதையடுத்து அமல்ராஜ் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பணியாளர் சுபாகரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சோழிங்கநல்லூர் நீதிமன்றம், சீமான் வீட்டு பாதுகாவலர், அமுல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அமல்ராஜுக்கு ஒரு வழக்கில் மட்டும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.