தமிழக மாணவர்கள் மும்மொழி கற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணமாலை வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், தொகுதி மறு சீரமைப்பு என முதல்வர் சொல்வது பொய் கூறுவதாகவும் – இதுதொடர்பான கூட்டத்திற்கு எதற்கு செல்லவேண்டும் என்றும் கூறினார்.
“மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டம் நடத்தவில்லை என்றும், மக்கள் பிரச்னைகளை பற்றி பேச திமுகவினருக்கு நேரமில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
மீனவர்கள் கைது பிரச்னையை மத்திய அரசு சரியான முறையில் கையாள்வதாகவும், மீனவர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் அண்ணாமலை கூறினார்.
தமிழக மாணவர்கள் மும்மொழி கற்க வேண்டும் என்றும், மும்மொழி கல்வி அமலில் இருந்த பள்ளியில் தான பயின்றதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
பொழுது விடிந்தால் போதும் பாஜகவினரை விமர்சிப்பதே திமுகவினரின் தொழிலாக உள்ளதாகவும், காலில் செருப்பு போடாமல் நடக்கலாம், அதில் தவறில்லை என்றும், ஜெயிலுக்கு தான் போகக்கூடாது என்றும் அண்ணாமலை கூறினார்.