புதுச்சேரி வில்லியனூரில் அதிமுகவினரால் திறக்கப்பட்ட எம்ஜிஆர் சிலையை ஓபிஎஸ் அணியினர் மீண்டும் திறக்க முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
வில்லியனூரில் சாலை விரிவாக்க பணிகளுக்காக கடந்த ஆண்டு அகற்றப்பட்ட எம்ஜிஆர் சிலை, மீண்டும் நிறுவப்பட்டது. அந்த சிலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்தார்.
இந்நிலையில் அந்த சிலைக்கு ஓபிஎஸ் அணியினர் மீண்டும் திறப்பு விழா நடத்த முயன்றனர்.அப்போது அங்கு வந்த அதிமுகவினருக்கும், ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் எச்சரித்தும் ஓபிஎஸ் அணியினர் கலைந்து செல்லாததால் அவர்களை கைது செய்தனர்.