அமெரிக்காவில் FED-EX நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் என்ஜினில் தீப்பற்றிய நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நியூ ஜெர்சியில் அமைந்துள்ள நியூவார்க் விமான நிலையத்தில் இருந்து FED-EX நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது.
ஆனால் சில நிமிடங்களிலேயே விமானத்தின் என்ஜினில் தீப்பற்றியது. இதனையடுத்து அதிகாரிகளின் அறிவுரைகளின் படி விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிரக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.