கோவை பீளமேட்டில் நகை பறிப்பில் ஈடுபட்ட இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
எல்லைதோட்டம் பகுதியை சேர்ந்த கீதாமணி என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்து கீதாமணி அணிந்திருந்த தங்கசங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றனர்.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் இரண்டு பெண்களையும் மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.