தென்காசி அருகே பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
புளியங்குடியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் பிரான்சிஸ் என்ற ஆசிரியர் பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பிரான்சிஸை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.