தெலங்கானாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயை, கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்திற்குட்பட்ட சுட்டலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பெண்ணின் தாயார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெண் காதலை முறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் நேரில் சென்று காதலியின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை கீழே தள்ளி கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றார். இதுகுறித்த புகாரில் ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.