இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 4வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவிக்க கோரியும் கடந்த 24ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
முதல் நாள் உண்ணாவரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்கச்சிமடம் பகுதியில் நடைபெற்ற வரும் 4ஆம் நாள் காத்திருப்பு போராட்டத்தில் மீனவர்கள் கைகளில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.