மொழி புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்தும் முன் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மாணவர்களின் மொழி புலமை குறித்த ASER அறிக்கையை படிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கல்வி சமத்துவத்துக்காக உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை பற்றி பேசுவதில் தவறில்லை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மும்மொழி கற்கும் வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்பதே எங்கள் கேள்வி என தெரிவித்துள்ளார்.
பாஜக எழுப்பும் கேள்விகளை முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு சாதகமாக மடைமாற்றம் செய்து கொள்வதாக விமர்சித்துள்ள அண்ணாமலை, வட இந்தியர்கள் ஆங்கிலத்தில் பேசத் தெரியாதவர்கள் என்றால் முதலமைச்சரின் ஆங்கில புலமை எத்தகையது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மொழி புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்தும் முன் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மாணவர்களின் மொழி புலமை குறித்த ASER அறிக்கையை படிக்க வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.