மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.
அப்போது பேசியவர், மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லையில் வசிக்கும் மராத்தி பேசும் மக்களின் நலன் காக்கப்படும் என்றும், எல்லை பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.