கேரளாவில் வாட்ஸ்-அப் மூலம் மூன்று முறை முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் இயற்றிய நிலையில், சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த அப்துல் ரசாக் என்பவர், கேரள மாநிலம் காசர் கோட்டில் உள்ள தனது மனைவிக்கு வாட்ஸ் அப் மூலம் “முத்தலாக்” கூறி, குரல் பதிவை அனுப்பினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், போலீஸில் அளித்த புகாரின் அடிப்படையில் அப்துல் ரசாக், அவரது தாய் மற்றும் சகோதரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.