ஆரியர்களை வந்தேறிகள் எனக்கூறி அந்த கருத்தை தமிழகத்தில் ஈ.வெ.ரா திணிக்க பார்த்ததாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் “இந்தஸ் நாகரிகம் மீதான பார்வைகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ரவி, ஆரியர்கள் என்று யாரும் இல்லை என தமிழ் சங்க நூல்கள் தெரிவிப்பதாக கூறினார்.
ஆரியத்தை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் தமிழகத்தில் சிலர் நூல்களை எழுதுவதாக கூறிய அவர், திராவிடச் சிந்தனையே ஆரியர் – திராவிடர் என்ற வேறுபாட்டை உருவாக்கியதாக தெரிவித்தார்.
மேலும், ஆரியர்களை வந்தேறிகள் எனக்கூறி அந்த கருத்தை தமிழகத்தில் திணிக்க பார்த்தவர் ஈ.வெ.ராமசாமி என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.