சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை உரிமையாளரை தாக்கி கடையை அபகரிக்க முயற்சி செய்ததாக திமுக நிர்வாகி மீது புகார் எழுந்துள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மனோ சங்கர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், திமுக நிர்வாகியான ராஜன், சரித்திர பதிவேடு குற்றவாளியுடன் இணைந்து தனது கடையை அபகரிக்க முயல்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் சொல்வதை கேட்காவிட்டால் கொலை செய்துவிடுவேன் என திமுக நிர்வாகி மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்.