துபாயில் உணவகம் நடத்திவந்த தமிழர், நண்பர்களின் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் மரண வாக்குமூலம் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜக்கம்மாள்துரை என்பவர், துபாயில் நண்பர்களுடன் இணைந்து உணவகம் நடத்தி வந்துள்ளார். தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அவரது நண்பர்களான ராஜேஷ், பிரகாஷ், மோகன் ஆகியோர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொழிலில் நஷ்டத்தை சந்தித்த ஜக்கம்மாள்துரை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பின்னர், அவரது உடல் தாயகம் கொண்டுவரப்பட்ட நிலையில், தனது தற்கொலைக்கு நண்பர்களே காரணம் என அவர் பேசிய வீடியோவை கண்டு அவரது மனைவி மாரிச்செல்வி அதிர்ச்சியடைந்தார்.
வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாரிச்செல்வி, தனது கணவரின் இறப்பிற்கு காரணமான அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு அளித்தார்.