ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வெங்காய வெடி மூட்டையை லாரியில் இருந்து இறக்கும்போது வெடித்து சிதறியதில் 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஐதராபாத்தில் இருந்து காக்கிநாடாவுக்கு 4 மூட்டை வெங்காய வெடிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதனை லாரியில் இருந்து கீழே இறக்கி வைக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர் கவனக்குறைவாக மூட்டையை கீழே போட்டபோது வெங்காய வெடிகள் வெடித்து சிதறியது. இதில் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.