சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கொளத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் ஆல்பர்ட் திரையரங்கில் திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். கேன்டீனில் வாங்கிய குளிர்பானங்களில் மதுபான வாடை அடித்ததால் அதிர்ச்சியடைந்த அவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திரையரங்கிற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கேன்டீனில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது குளிர்பானங்களில் பூஞ்சை படர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், நூற்றுக்கணக்கான குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.