ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி சுகாதாரத்துறை முழுவதும் சீர்குலைந்து போயிருந்ததாக அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி சுகாதாரத்துறை முழுவதும் சீர்குலைந்து போயிருந்ததாக குற்றம் சாட்டினார்.
அரசு மருத்துமனைகள் முழுவதும் நோய் வாய்ப்பட்டுள்ளதாக கூறிய அவர், முதலில் அவற்றிற்கே சிகிச்சை தேவை என தெரிவித்தார்.
மேலும் சுகாதாரத்துறை என்ற பெயரில் ஊழல் மட்டுமே நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய ரேகா குப்தா, அவை தற்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளதாக கூறினார்.