குழந்தைகளின் எதிர்காலத்தை விட திமுக அரசிற்கு அரசியலே முக்கியமாக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பிஎம்ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப தமிழக அரசை, பாஜக கட்டாயப்படுத்தியதா? என திமுக எம்பி கனிமொழிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் தரவு தமிழக அரசை பாராட்டுவதாக இருந்தால், முரசொலியில் முதல் பக்கத்தில் வெளியிடும் நீங்கள், அந்த தரவுகள் தமிழக அரசை விமர்சிப்பதாக இருந்தால் பாரபட்சமான தரவுகள் என ஏன் கூறுகிறீர்கள் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்டவை புதிய கல்வி கொள்கையில் முன்மொழியப்பட்டவையே என தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுகவை பொறுத்தவரை, குழந்தைகளின் எதிர்காலத்தை விட அரசியலையே முக்கியமானதாக பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.