சிவகங்கை அருகே சிறுவனை கடத்த முயன்றவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த பெற்றோர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வாணியங்குடி சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி, பவித்ரா தம்பதி. இவர்களது 8 வயது மகன் வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
அப்போது அங்குவந்த நபர் கண்மாயில் மீன் பிடிக்கலாம் வா என ஆசை வார்த்தை கூறி சிறுவனை அழைத்து சென்றுள்ளார். தகவலறிந்து வந்த பெற்றோர் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சிறுவனை கடத்தி சென்றவர் மதுரை மாவட்டம், மேலூர் பகுதியை சேர்ந்த லிவிபாண்டி என்பது தெரிய வந்த நிலையில் அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.