அசாம் மாநில முன்னாள் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவின் மகள் காஷ்யப், தனது கார் ஓட்டுநரை செருப்பால் வீடியோ வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், கார் ஓட்டுநர் மண்டியிட்டு அமர்ந்துள்ளார். அப்போது அவரை காஷ்யப், கடுமையாக திட்டி செருப்பால் அடிக்கிறார். அசாம் மாநிலத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த எம்.எல்.ஏ .ஹாஸ்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வரின் மகள், குடித்துவிட்டு தனது வீட்டுக் கதவை தட்டியதால் செருப்பால் அடித்ததாக கூறியுள்ளார்.