அசாம் மாநிலம், ரோதக்கில் காங்கிரஸ் பிரமுகரைக் கொன்று உடலை சூட்கேசில் வைத்து இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ரோதக்கில் உள்ள ஒரு பேருந்து நிலையம் அருகே சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் பிரமுகரான ஹிமானி நர்வால் என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் அப்பெண்ணின் நண்பரான சச்சின் நர்வால் என்பவரே கொலையாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் தொடர்பான தகராறு காரணமாக பெண் காங்கிரஸ் பிரமுகர் கொல்லப்பட்டதாக அரியானா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.