சர்க்கரை நோய், சளி மற்றும் கிருமி தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக உட்கொள்ளப்படும் 145 மருந்துகள் தரமற்றதாக இருந்ததை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது.
அந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தயாரிக்கப்படுகின்றன. அதன் விவரங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.