முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிகழ்ந்த மாயத்தோற்றத்தால் தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய முந்தைய காணொலி மற்றும் தற்போதைய காணொலியை எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டு அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிகழ்ந்த மாயத்தோற்றத்தால் தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளதாகவும், ஏன் அந்த மாயத்தோற்றம் ஏற்பட்டது என்பதும் தங்களுக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரும் 2026 சட்டமன்ற தேர்தல் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு உரிய ஓய்வைக் கொடுப்போம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.