தமிழக அரசால் நடத்தி முடிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம், திமுகவின் பிரசார யுக்தியாகவே பார்க்கப்படுகிறது என வி.கே.சசிகலா விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்ற வி.கே.சசிகலா, சம்பந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, உண்ணாமுலை அம்மன் சன்னதியில் வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் மக்களை திசை திருப்ப திமுக முயற்சி செய்வதாக விமர்சித்தார்.
திமுக ஆட்சியின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் கூறினார். திமுக ஆட்சி கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் எந்த மக்கள் நலத்திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது என்றும் சசிகலா தெரிவித்தார்.