திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டியில் ஏற்பட்ட மோதலில் 3 இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வீராங்குப்பம் பகுதியில் நேற்று எருது விடும் போட்டி நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான காளைகள் அங்கு ஓட விடப்பட்டு, குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனிடையே காளைகளை ஓட விடுவதில் அங்கிருந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது.
இதில் ராமசந்திரபுரத்தை சேர்ந்த சதீஷ், குபேந்திரன் மற்றும் நல்லயோகன் ஆகிய 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வீராங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கத்தியுடன் இளைஞர் ஒருவர் எதிர்தரப்பினருக்கு மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.