சிம்பொனி இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்பல்லோவில் “வேலியண்ட்” என்ற தலைப்பில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையை அறிமுகப்படுத்த உள்ளார். இசையமைப்பாளர் மைக்கேல் டாம்ஸின் தலைமையில் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவின் நிகழ்ச்சி மாரச் 8ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் லண்டன் செல்வதற்காக புறப்பட்ட இளையராஜா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, வரும் 8-ந்தேதி லண்டன் அப்பல்லோ அரங்கில்”வேலியண்ட்” இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக அமையம் என்பதில் சந்தேகம் இல்லை எனறும் அவர் தெரிவித்தார்.
இது எனது பெருமை அல்ல. நாட்டின் பெருமை என்றும், Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா என்றும் அவர் கூறினார். நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் தான் என்றும், உங்களின் பெருமையை லண்டனில் சேர்க்கப் போவதாகவும் இளையராஜா கூறினார்.